pa ranjith about drainage cleaning issue

Advertisment

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக கழிவுநீர் தொட்டிகளுக்குள் சிக்கி விஷவாயு தாக்கி பணியாளர்கள் மரணம் அடையும் சம்பவங்கள் நடந்து கொண்டே வருகிறது. கடந்த 1 ஆம் தேதி திருவள்ளூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் மயக்கமடைந்து உயிரிழந்தனர். கடந்த 5 ஆம் தேதி திண்டிவனத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிராஜ் மிஞ் பாதாள சாக்கடைக்கு வெட்டப்பட்ட கால்வாயின் கரை திடீரென சரிந்து விழுந்ததில் சிக்கி பலியானார்.

இந்நிலையில் இந்த தொடர் சம்பவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! இக்கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்கும் கடும் கண்டனங்கள்.

மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அண்மையில் பா.ரஞ்சித்தின் உதவியாளர் விடுதலை சிகப்பி மலக்குழி மரணங்கள் குறித்து ஒரு நிகழ்வில் கவிதை வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கும் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.