p vasu speech in Mr House Keeping Press Meet

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், யூடியூபர் ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’. இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வாசு பேசியதாவது, “அருண் என் உதவியாளர், அவர் படம் செய்கிறேன் என்றவுடன் யார் புரோடியூசர் எனது கேட்டேன், தேனாண்டாள் பிலிம்ஸ் என்றார். அந்தக்கம்பெனியில் படம் செய்வது பெரிய விசயம், இதுவே பெரிய வெற்றி என்றேன். தேனாண்டாள் பிலிம்ஸ் இராம நாராயணன் மிகப்பெரிய ஆளுமை, அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். ரஜினி, விஜயகாந்த் எல்லாம் அவரைப்பற்றி அவ்வளவு சொல்வார்கள். அவரின் மகன் தான் முரளி. அப்படிப்பட்ட கம்பெனியில் அருண் படம் செய்வது மகிழ்ச்சி. நான் பாடல்கள் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது, இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும்.

Advertisment

இன்றைய காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல வருடம் கழித்து வந்த மதகஜராஜா ஜெயித்துள்ளது. நடிகர் விஜய் என்னுடைய நடிகன் படம் நடிக்க ஆசைப்பட்டார். அது மிகச்சிறந்த கமர்ஷியல் படம். ஆனால் கவுண்டமணி, மனோரமா இல்லாமல் இப்போது அந்தப்படத்தை எடுக்க முடியாது. இந்தப்படத்திற்கு வருவோம். லாஸ்லியா தமிழ் பேசும் நடிகை, அவர் இன்னும் உயரம் தொட வாழ்த்துகள். ரயானிடம் நல்ல திறமை உள்ளது. ஹரி பாஸ்கருக்கு வாழ்த்துகள்” என்றார்.