Advertisment

பாக்ஸிங் க்ளவுஸுடன் பா.ரஞ்சித்!

p ranjith

Advertisment

அண்மையில்தான் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'காலா' படத்தின் இரண்டாம் ஆண்டு இணையத்தில் கொண்டாடப்பட்டது. இந்தப்படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் பாலிவுட்டில் பெரும் பட்ஜெட்டில் பீரியட் படம் ஒன்றை உருவாக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின அதன் பின்னர் அதுகுறித்து எந்தச் செய்தியும் வெளியாகவில்லை.

இதன்பின் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வந்தார். அண்மையில் ஐந்து படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

பா. ரஞ்சித் நடிகர் ஆர்யாவை வைத்து பாக்ஸிங் படம் ஒன்றை இயக்கி வருகிறார். 'சல்பேட்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வட சென்னையை கதைக் களமாகக்கொண்டு உருவாக இருப்பதாகத் தெரிகிறது.

Advertisment

இந்நிலையில் பா.இரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். கையில் பாக்சிங் க்ளவுஸுடன் இருக்கும் தனது போட்டோவை அவர் பகிர்ந்திருப்பது, அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Actor Arya pa.ranjith
இதையும் படியுங்கள்
Subscribe