கொசுவுக்கு ஸ்ப்ரே அடித்த ஓவியா 

oviya

நடிகர் விமலோடு நடித்த களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஓவியா. அதன் பின் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியான பாத்திரங்கள் அமையாததால் நடிப்பில் சற்று ஒதுங்கியிருந்த ஓவியா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் அரங்கேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உலகம் முழுவதும் பிரபலமானார். அதன் பின் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளாமே உருவானது. இதனையடுத்து ஓவியாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் நடிகை ஓவியா தற்போது காஞ்சனா 3, களவாணி 2, 90 கட்டிங் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் காஞ்சனா 3 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஓவியா துப்புறப்பணியாளர்கள் பயன்படுத்தும், கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை வைத்து படப்பிடிப்பு முழுவதும் அடித்திருக்கிறார். இவரது கொசு விரட்டும் செயலைப் பார்த்து படக்குழுவினர் அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள். மேலும் இவர் மருந்து அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அனைவரது பாராட்டுகளை அள்ளி வருகிறது.

இதில் குறிப்பிட்டஓவியா வீடியோவிற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

https://twitter.com/twitter/statuses/969512976511217664

oviya oviyahelen oviyaarmy
இதையும் படியுங்கள்
Subscribe