style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பிக்பாஸுக்கு பிறகு அவ்வப்போது சந்தித்து வரும் ஆரவ், ஓவியா ஜோடி தங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ள நிலையில் தனக்கும் ஆரவ்க்கும் உண்டான உறவு குறித்து பேசியபோது.... "நாங்கள் இருவரும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக அவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம். நாங்கள் லிவிங் டு கெதரில் இல்லை. சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள். அதை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை. இருவருமே படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை" என்று விளக்கம் அளித்தார்.