பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஆர்மி உருவாகும் அளவிற்கு பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமான படம் களவாணி. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகிறது.

Advertisment

kalavani

களவணி படத்தை இயக்கிய சற்குணம்தான் இந்த இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கவும் செய்கிறார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புதிதாக விக்னேஷ்காந்த், மயில்சாமி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் திருமணம் பற்றியும் அரசியலுக்கு வருவீர்களா? என்கிற கேள்விகள் கேட்கப்பட்டது.

Advertisment

அதற்கு பதிலளித்த ஓவியா, “நான் திருமணமே செய்துகொள்ளப் போவதாக இல்லை. எனக்கு அந்த அவசியம் இதுவரை வரவில்லை. தனியாக இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே திருமணம் வேண்டாம். எதிர்காலத்தில் என் மனது மாறினால் பார்ப்போம். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும். நான் நடிக்கும் படங்கள் லாபம் பார்க்கவேண்டும். அது போதும்” என்று கூறியுள்ளார்.