Published on 29/07/2024 | Edited on 29/07/2024

களவாணி, மெரினா, கலகலப்பு எனப் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் ஓவியா. கடைசியாக தமிழில் யோகி பாபுவிற்கு ஜோடியாக பூமர் அங்கில் படத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தொடர்ந்து தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சாப்பிடுவது போல ஒரு புகைப்படம் பகிர்ந்துள்ளார். மேலும் “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தில், ஒரு கப்பில் மது போல் இடம்பெற்றுள்ளது. அதை மேற்கோள்காட்டி, மதுவை அருகில் வைத்துக் கொண்டே மது குடிக்கக்கூடாது என்பது போல் பதிவைப் பகிரலாமா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.