
பிக்பாஸ் சீசன் 1ன் டைட்டில் வின்னர் ஆரவ், ராஜ பீமா என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதேபோல அந்த படத்தில் பிக்பாஸ் ஓவியாவும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. அவர் படக்குழுவுடன் வருகின்ற ஜனவரி மாதம் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்த படத்தில் ஒரு குத்து பாடலுக்காக ஹீரோ ஆரவுடன் ஆட்டம் போட்டுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த பாடலுக்கான ஷூட்டிங் கடந்த வாரம் பொல்லாச்சியில் இரண்டு நாட்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக அஷிமா நடிக்கிறார்.
முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியாவுக்கு என்று பல ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்ற ஆரவுடன் இவருக்கு காதலும் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த ஜோடி பேமஸாகியது. இந்த படத்தில் கௌரவ தோற்றம் என்றாலும், நீண்ட நேரம் இடம் பெறுவார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.