பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா தற்போது 'காஞ்னா-3' மற்றும் 'களவாணி-2' படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிகை ஓவியா நடிக்க உள்ளார். '90 எம் எல்' என்று பெயரிட்டுள்ள இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளார். 'சக்க போடு போடு ராஜா' படத்தை அடுத்து சிம்பு இசையமைக்கும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கனவே சிம்பு இசையில் ஓவியா பாடிய 'மரண மட்ட' பாடல் புத்தாண்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. விஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், ஆண்டனி படத்தொகுப்பையும் கவனிக்கிறார்கள்.
சரக்கடிக்கும் பிக்பாஸ் ஓவியா
Advertisment