Advertisment

9 ஆண்டுகள் கழித்து ரீ-எண்ட்ரி கொடுக்கும் ஓவியா!

கேரளாவைச் சேர்ந்த ஓவியா, தொடக்கத்தில் மலையாள சினிமாவின் மூலம்தான் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார். இதனையடுத்து நாளை நமதே படத்தின் தமிழில் அறிமுகமான ஓவியா, களவாணி படத்தில் ஹீரோயினாக நல்ல வரவேற்பை பெற்றார். இதன்பின் ஓவியாவுக்கு தமிழ் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டதன் மூலம் பல ரசிகர்கள் கிடைத்தனர். ஓவியா ஆர்மி என்று ஓவியாவின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் சுற்றி வந்தனர்.

Advertisment

oviya

பிக்பாஸில் அவருக்கு கிடைத்த புகழ் மூலம் இனி ஒரு ரவுண்ட் வருவார் என்று பார்த்தால் ஓவியா நிறைய படங்களில் நடிப்பதை தவிர்த்து இனி எனக்கு பிடித்த கதைகளில் மட்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்படி 90 எம் எல் என்றொரு படத்தில் நடித்து, மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

Advertisment

மலையாள சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓவியா மலையாளத்தில் நடிக்கவே இல்லை. தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஓவியா, “எனக்கு இது அறிமுகப்படம் போல உள்ளது. இங்கு யாருக்கும் என்னைத் தெரியாது” என்றார்.

malayalam oviya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe