oviya arav

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஓவியா - ஆரவ் காதல் விவகாரம் அவ்வப்போது தலையை எட்டிப்பார்த்தவண்ணம் உள்ளது. இருவரும் தற்போது சகஜமாக பழகிவரும் நிலையில் இவர்கள் பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆரவ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடியாக நின்று செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.