Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ்வும், ஓவியாவும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. பின்னர் ஆரவ் இதை மறுத்த காரணத்தினால் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் பழைய சம்பவத்தை மறந்து தற்போது சகஜமாக பழகி வருகிறார்கள். அவ்வப்போது இவர்கள் பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஆரவ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டினர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.