Advertisment

பிரபல பாடகி வீட்டில் புகுந்து 2.5 கோடி நகைகளை திருடிய முகமூடி திருடன்! 

பிரபல பாப் பாடகியான இக்கி அசலியாவின் அட்லாண்டா வீட்டில் ரூ. 2.5கோடிக்கு திருடுபோயிருப்பது அக்கம்பக்கத்தில் இருக்கும் மற்ற பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

Advertisment

iggly

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவரான பாடகி இக்கி அசலியா, பிளேபாய் கார்ட்டி என்னும் ராப்பருடன் சேர்ந்து ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருகின்றார். இவர்கள் இருவரும் இந்த வீட்டில் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு, தனது காதலன் பிளேபாய் கார்ட்டி வீட்டுக்குள் வருவதற்காக பின் கதவை திறந்துவைத்துவிட்டு வீட்டிற்குள் தனியாக இக்கி அசலியாஇருந்திருக்கிறார். அப்போது முகமுடி அணிந்துகொண்டு வந்த ஒருவன், பின் கதவை திறந்து டைனிங் அறையில் இருந்த நகை பையை திருடி சென்றுள்ளான். அந்த பையில் அசலியா மற்றும் கார்ட்டி இருவரின் நகைகளும் ஒன்றாக இருந்திருக்கிறது.

Advertisment

அந்த பையில் 7 வைர மோதிரங்கள், வைர கடிகாரங்கள் உள்பட 3 லட்சத்து 66 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார். ரூ.2 கோடியே 62 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புடைய ஆடம்பர நகைகள் இருந்தன.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இக்கி அசலியா மற்றும் பிளேபாய் கார்ட்டி இருவரும் இணைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

popsinger
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe