Advertisment

'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

OTT release date of Kamalhaasan 'Vikram' announced

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம்உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட சில நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனிடையே படப்பிடிப்பின் போது கமல் உடற் பயிற்சி செய்த வீடியோவை படக்குழு வெளியிட்டது.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி 'விக்ரம்' படம் வருகிற ஜூலை 8-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

hotstar lokesh kanagaraj vikram movie actor kamal hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe