Advertisment

'டான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

OTT Release Date Announcement for 'Don' Movie

Advertisment

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டான்'. 'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. கலகலப்பான கல்லூரி திரைப்படமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று 12 நாட்களில் ரூ.100கோடி வசூலித்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 'டான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ஜூன் 10-ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

actor sivakarthikeyan don movie lyca priyanka mohan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe