இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புது முக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதர்ஸ்’.
கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரிப்பிலும், கார்த்திக் ஜி இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இப்படத்தில், கவுரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியகியுள்ளது. தமிழ் திரையுலகிற்கு வருகை தரும் புதிய திறமைகளை வரவேற்று முன்னணி நட்சத்திரங்கள் வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா சரவணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர், சமூக ஊடகங்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.