Advertisment

ஆஸ்கர் 2024 - விருது வென்றவர்களின் முழு பட்டியல்

oscars 2024 winners list

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் பல்வேறு நாட்டினர் தங்களது திரைப்படங்களை அனுப்பி வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதில், இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால் இப்படம் இறுதி பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது.

Advertisment

இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டது ஆகும்.

Advertisment

இந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருது விழா வழக்கம் போல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் ‘டு கில் எ டைகர்’ படம் விருது பெறவில்லை.இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்றுள்ளது.

சிறந்த படம் - ஒப்பன்ஹெய்மர்

சிறந்த நடிகர் - சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த ஒளிப்பதிவு - ஒப்பன்ஹெய்மர்

சிறந்த சர்வதேச படம் - தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த தழுவல் திரைக்கதை - அமெரிக்கன் ஃபிக்‌ஷன்

சிறந்த அசல் திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - வார் இஸ் ஓவர்

சிறந்த அனிமேஷன் படம் - தி பாய் அண்ட் தி ஹெரான்

சிறந்த ஆவணக் குறும்படம் - தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

சிறந்த ஆவணப்படம் - 20 டேஸ் இன் மரியுபோல்

சிறந்த பாடல் - வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)

சிறந்த பின்னணி இசை - ஒப்பன்ஹெய்மர்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - புவர் திங்ஸ்

சிறந்த ஆடை வடிவமைப்பு - புவர் திங்ஸ்

சிறந்த படத்தொகுப்பு - ஒப்பன்ஹெய்மர்

சிறந்த ஒலி - தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - புவர் திங்ஸ்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - காட்ஜில்லா மைனஸ் ஒன்.

கடந்த வருட ஆஸ்கர் விழாவில், நீலகிரி முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியை வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம், சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வென்றதும், ராஜமௌலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவில் விருது வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

christopher nolan hollywood oscar awards
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe