Skip to main content

95வது ஆஸ்கர் விருது விழா - வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Oscars 2023 full winners list

 

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன. 

 

இந்த 95வது ஆஸ்கர் விருது விழாவில் வெற்றி பெற்ற படங்களின் முழுப்பட்டியல் பின்வருமாறு...

 

சிறந்த நடிகர் -  பிரெண்டன் ஃப்ரேசர் (  The Whale )

 

சிறந்த நடிகை - மிஷெல் யோ ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்) 

 

சிறந்த துணை நடிகர் (Best Supporting Actor) - கே ஹுய் குவான் ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்) 

 

சிறந்த துணை நடிகை (Best Supporting Actress) - ஜேமி லீ கர்டிஸ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்) 

 

சிறந்த இயக்குநர் - க்வான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ், All Quiet on the Western Front [Germany])

 

சிறந்த படம் (Best Picture) - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once)

 

சிறந்த சர்வதேச படம் (Best International Feature Film) - ஆல் க்வைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட், [All Quiet on the Western Front (Germany)]

 

சிறந்த ஆவணப்படம் (Best Documentary Feature Film)- நவல்னி (Navalny)

 

சிறந்த ஆவணப்பட குறும்படம் (Best Documentary Short Film) - தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers)

 

சிறந்த அனிமேஷன் படம் (Best Animated Feature Film) - கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio)

 

சிறந்த அனிமேஷன் குறும்படம் (Best Animated Short Film) - தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ் (The Boy, the Mole, the Fox, and the Horse)

 

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் (Best Live Action Short) -  ஆன் ஐரிஷ் குட்பை (An Irish Goodbye)

 

சிறந்த அசல் திரைக்கதை (Best Original Screenplay) - டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )

 

சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay) - சாரா போலே ( Women Talking) 

 

சிறந்த அசல் பாடல் (Best Original Song) -  நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்) 

 

சிறந்த ஒலி (Best Sound) - மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் (Top Gun: Maverick) 

 

சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography) - ஜேம்ஸ் ஃப்ரெண்ட் தேர்வு (ஆல் க்யட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட், All Quiet on the Western Front)

 

சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing) - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் 

 

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (Best Visual Effects) - ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ( அவதார்: தி வே ஆஃப் வாட்டர்)

 

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் (Best Makeup and Hairstyling) - தி வேல் (The Whale)

 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Best Production Design) - கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர் ( ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்,[All Quiet on the Western Front]) 

 

சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume Design) - ரூத் கார்ட்டர் ( பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர், [Black Panther: Wakanda Forever])

 

சிறந்த அசல் பின்னணி இசை (Best Original Score) - ஆல் கொய்ட்  ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (All Quiet on the Western Front).

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஸ்கர் 2025 விருது விழா விவரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
oscar 2025 update

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் இப்படமும் விருது பெறவில்லை.

இவ்விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி (இந்தியாவில் மார்ச் 3 ) நடக்கும் என அறிவித்துள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.