bdzg

Advertisment

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் திரையுலகமும் முடங்கியுள்ளது. இதற்கிடையே டிஜிட்டலில் வெளியாகும் படங்களும் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என சமீபத்தில் ஆஸ்கர் குழு அறிவித்த நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா நான்கு மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த, ஆஸ்கர் குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா காரணமாக பல ஹாலிவுட் படங்கள் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளதால் ஆஸ்கர் குழுமம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 93 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழா இதுவரை ஒரு முறைகூட தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.