Advertisment

ஆஸ்கர் விருது 2021... முழு பட்டியல்!

oscar

Advertisment

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆண்டிற்கான 93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் 93ஆவது ஆஸ்கர் விழா இன்று (26.04.2021) நடைபெற்றது. விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அவை பின்வருமாறு...

சிறந்த படம் - நோமேட்லாண்ட்

சிறந்த நடிகர் - அந்தோணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

சிறந்த நடிகை - பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லாண்ட்)

சிறந்த இயக்குநர் - க்ளோயி சாவ் (நோமேட்லாண்ட்)

சிறந்த வெளிநாட்டு படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் - கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த ஒளிப்பதிவாளர் - எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை - எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை - கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை - ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் - பைட் ஃபார் யூ

சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

Advertisment

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு - அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

oscar awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe