
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.
இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட இருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஆர்யா இதனை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின்டீசரும் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இப்படத்தை ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை வழங்குகிறார். மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சஷர்ஸ் தயாரிக்கிறது.