ஃபாசிலா அல்லானா மற்றும் கம்னா மெனேசஸ் தயாரிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில்பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் திரில்லர் ஜானரில் 'ஒரு கோடை Murder Mystery'என்கிற வெப் தொடர்உருவாகியுள்ளது.
இந்த வெப் தொடரில் நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு பர்மா, என்னோடு விளையாடு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுதர்சன் எம் குமார் இசையமைத்துள்ளார். ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற 21ஆம் தேதி இந்த தொடர் வெளியாகவுள்ளது.
பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்டஇளைஞன் வியோமுக்கு தன்னுடன்வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குகொள்ளும்தாரா மீது ஈர்ப்பு வருகிறது. அவனும் தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள்.அதைத் தொடர்ந்துதாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது. தாராவின்மரணத்தால்உடைந்துபோகும் வியோம், தனது நண்பர்களின் உதவியுடன் தாராவிற்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முயல்கிறான். பரபரப்பான திருப்பங்களுடன் பள்ளி மாணவர்கள் துப்பறியும் ஒரு புதுமையான திரில்லராக மலைநகரப் பின்னணியில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.