தமிழில் விதார்த் நடிப்பில் வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் ரகுராம். இப்படத்தின் இயக்குநரின் அடுத்த படம் 'சத்திய சோதனை' படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். இது தவிர இரண்டு படங்களுக்கு இசையமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ரகுராம் இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ரகுராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.