style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
இணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் பிரியா பிரகாஷ் வாரியரின் திரைப்படமான ’ஒரு அடார் லவ்’ தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இயக்குனர் ஓமர் லுலு தற்போது உள்ள பள்ளி பருவ காதலை முன்வைத்து ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து ’மாணிக்க மலராய்’ என்ற பாடலும், படத்தின் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட, அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர். குறிப்பாக அவரின் ரியாக்ஷன்கள் மட்டும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது. இதையடுத்து ’ஒரு அடார் லவ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் படத்தை உருவாக்கியுள்ளனர். கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம் உலகம் முழுவதும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/c76TNgpd8TI.jpg?itok=39afWTtf","video_url":"