விழாவுக்கு லேட்டாக வந்த நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்... மேடையிலேயே கண்கலங்கிய பிரபல நடிகை...

ஒரு அடார் லவ் படத்தில் ஒரு பாடல் காட்சியில் கண்ணடித்தன் மூலம் இந்தியளவில் வைரலானவர் பிரியா வாரியர். அதனை தொடர்ந்து அந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின்பு நூரின் ஷெரீப் என்பவர்தான் பிரியா வாரியருக்கு மேல் ரசிகர்களை கவர்ந்தவர்.

noorin sherif

இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நூரின் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்கு நூரின் ஷெரீப் தாமதமாக வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள், நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாகபட்டது. இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார்.

வலியை பொறுத்துக் கொண்டு விழாவில் கலந்துகொண்டார். தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மக்கள் கூட்டம் அதிகமாக கூட வேண்டும் என்பதற்காக, தன்னை அருகில் உள்ள ஓரு ஓட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் நூரின் விளக்கம் அளித்தார்.

malayalam
இதையும் படியுங்கள்
Subscribe