/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/474_4.jpg)
இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு பாரதிராஜா அண்மையில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார். சென்னை நீலாங்கரை வீட்டில் ஓய்வு எடுத்து வந்த பாரதிராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நலம் விசாரித்து வந்தனர்.
இதனையடுத்தது சமீபத்தில் பாரதிராஜா மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. பின்பு சில தினங்களுக்கு முன்பு நலமுடன் வீடு திரும்பினார். தான் நலம் பெற்று வீடு திரும்பியதை தொலைபேசி வாயிலாக கமல்ஹாசனிடம் தெரிவித்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)