Skip to main content

குளிரும் ஊட்டி... குறும்படங்கள் 90... தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள்... நீங்களும் கலந்துகொள்ளலாம் - ஊட்டி திரைப்பட விழா

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

தெற்காசிய குறும்படப் போட்டியுடன்,  மிக பிரமாண்டமாக மூன்றாம் ஆண்டில் “ஊட்டி திரைப்பட விழா” வரும் டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்திரைப்பட விழா குறித்து ஊட்டி திரைப்படச் சங்கத்தின் தலைவர் திரு.பாலநந்தகுமார், செயலாளர் பவா செல்லதுரை, திரைப்பட விழா இயக்குநர் திரு.மாதவன் ஆகியோர் கூறியதாவது...

 

ooty film fest

 

திரைப்பட ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் இதமான பருவநிலையில், சுமார் 3 லட்சம் ரூபாய் அளவிலான பரிசுப்போட்டிகளுடன், இந்தியா, இலங்கை, ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 90 குறும்படங்கள் இந்தாண்டு திரையிடத் தேர்வாகியுள்ளது. இவ்விழா நூற்றைம்பது ஆண்டு பழமையான ‘அசெம்ப்லி ரூம்ஸ்’என்ற திரையரங்கில் நடைபெறுவது பார்வையாளர்களின்  கவனத்தை  கூடுதலாக ஈர்க்கும்.  தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா மற்றும் ஆந்திரா என தென்னிந்திய மாநிலங்களில் இருந்து மிக எளிதாக  ஒன்றுகூட வசதியாக ஊட்டி உள்ளதால்,  இது தென்னிந்தியாவின் குறிப்பிடும்படியான ஒரு திரைப்பட விழாவாக வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.  

• தெற்கு ஆசிய துணைக்கண்டத்தில் தரமான குறும்படங்களை ஊக்குவித்தல் 
• குறும்பட கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் தயாரிப்பளர்களையும் இணைக்கும் மேடையினை உருவாக்குதல், கலந்துரையாடச் செய்தல் 
• இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச தரத்தில் குறும்படங்களை கண்டு ரசித்து அவற்றைப்பற்றிய விவாதத்தில் பங்குகொள்ள சந்தர்ப்பத்தை உருவாக்குதல்
• தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டுதல்
• தமிழ குறும்பட துறையை மேலும் வலுப்பெற செய்தல்
போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்விழாவை ஒருங்கிணைத்து முன்னெடுப்பது ஊட்டி திரைப்படச் சங்கம். 

மூன்று நாட்களுக்குள், ஒவ்வொரு நாளும் 10 மணிநேர திரையிடல் நடக்கும். கூடவே மற்றொரு அரங்கில் ஒவ்வொரு காலை மாலை என 2 அமரவுகள் சிறப்பு திரைப்பட வல்லுநர்கள் மற்றும் தொழிநுட்பக் கலைஞர்களுடன் கலந்துரையாடல் என விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அளவிலான சிறந்த குறும்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைப்பதோடு, அந்தந்த நாடுகளைச் சார்ந்த இளம் திரைப்பட ஆர்வளர்களைச் சந்தித்து உரையாடவும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. 

 

assembly rooms

 

இந்தாண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், நாடக ஆசிரியர், திரைக்கதையாசிரியர் திரு. ஜாய் மேத்யூ தலைமையிலான குழு பரிசுக்குறிய படங்களைப் பார்த்து தேர்வு செய்ய உள்ளது. இவ்விழாவில் இயக்குநர்கள் ராம், ரஞ்சித், சீனுராமசாமி, ஜீவா சங்கர் ’நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன், ’பரியேறும் பெருமாள்’பட இயக்குநர் மாரிசெல்வராஜ், ’96’ பட இயக்குநர் பிரேம்குமார், மேற்குத் தொடர்ச்சிமலை பட இயக்குநர் லெனின் பாரதி, எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான திரு.அஜயன்பாலா ஆகியோருடன் இன்றைய தமிழ் திரைப்பட உலகின் நம்பிக்கைகுறிய இளம்படைப்பாளர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

கடைசி நாளான டிசம்பர் 9-ம் தேதியில் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளைக் வழங்கி கௌரவிக்கவுள்ளார். திரைப்பட ரசிகர்கள் தங்கள் வருகையை www.ootyfilmfestival.org என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி திரைப்படச் சங்கத்தின் பொருளாளரும், அயல் சினிமா இதழாசிரியருமான திரு.வேடியப்பன் அவர்களை 9600156650 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.

Next Story

முதலில் தலைகாட்டிய சிறுத்தை; உடனே வந்த கரடி; வைரலாகும் வீடியோ

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
The leopard that first showed its head; The bear that came immediately; A viral video

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. நடமாடும் சிறுத்தையின் படத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது. 8 மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதேபோல் ஊட்டியில் குடியிருப்பு பகுதி ஒன்றில் சிறுத்தை ஒன்று நடமாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ காட்சியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல, அடுத்த நொடியே கரடி ஒன்றும் அதே குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இந்த காட்சிகள் இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது.