Advertisment

'அவங்க கதை மட்டும் மனசுல ஓடிக்கிட்டே இருக்கும்' - கவனம் ஈர்க்கும் பிரபுசாலமனின் ட்ரைலர்

'Only his story will keep the mind running' - Prabusolomon trailer released

தமிழ் சினிமாவில் 'மைனா', 'கும்கி', 'கயல்' உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'காடன்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், தற்போது 'செம்பி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'டிரைடெண்ட் ஆர்ட்ஸ்' மற்றும் 'ஏஆர் எண்டர்டெயின்மெண்ட்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'செம்பி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு பேருந்தின் வாழ்க்கையையும், மலைகளில் தேன் எடுக்கும் பாட்டி மற்றும் அவரது பேத்திக்கும் இடையேயான உறவையும், கொஞ்சம் அரசியலும் கலந்து சொல்லியிருப்பது போல் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. பிரபுசாலமனின் முந்தைய படங்களை போலவே மலைப்பகுதிகள் அதிகம் இடம்பெற்றிருக்கும் இந்த ட்ரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளத்தில் இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது.

Advertisment

sembi movie kovai sarala prabhu solomon Ashwin kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe