Published on 22/05/2021 | Edited on 22/05/2021

கரோனா சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக உலகெங்குமுள்ள பிரபலமான ஓவியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு ஆன்லைன் ஓவிய கண்காட்சியை சிங்கப்பூரை சார்ந்த மனித நேயங்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். பிரபல ஓவியரும், நடிகருமான பொன்வண்ணன் இதன் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஓவியங்கள் விற்று கிடைக்கும் பணத்தை இந்தியாவில் கோவிட் 19 மருத்துவ செலவுக்காக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://gnaniarts.com/product-category/covid-19-charity-project/ மேற்கண்ட இணையதளத்தில் சென்று அவரவருக்கு விருப்பப்பட்ட ஓவியங்களை வாங்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.