Skip to main content

"தமிழ் ராக்கர்ஸ்ஸில் பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் " - தயாரிப்பாளர் எச்சரிக்கை!

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
fwrf

 

ரகுபதி இயக்கத்தில் பாலாஜி மகாராஜா, நிகிலா விமல், அப்புக் குட்டி, இயக்குநர் இந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒன்பது குழி சம்பத்' படம் ரீகல் டாக்கீஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... 

 

"இந்தியப் பதிப்புரிமை சட்டம்‌ 1957யின்‌ பிரிவு 17 மற்றும்‌ பர்னே சாசனம்‌ சரத்து 15(2) மற்றும்‌ அனைத்து தேசிய சட்டங்களின்‌ படி இப்படத்தின்‌ உரிமையாளர்‌ 60-20 பிக்சர்ஸ்‌ நிறுவனம்‌. இத்திரைப்படத்தினை இந்தியச் சட்டங்கள்‌ மற்றும்‌ மற்ற நாடுகளின்‌ சட்டங்களின்‌ கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாகத் திரையிடுதல்‌ தண்டனைக்குரிய குற்றமாகும்‌ மற்றும்‌ உரிமையியல்‌ பொறுப்பு மீறிய செயலாகக் கருதப்படும்‌. இப்படத்தில்‌ வரும்‌ கதாபாத்திர‌ பெயர்கள்‌, சம்பவங்கள்‌ அனைத்தும்‌ கற்பனையே. படத்தயாரிப்பாளர்கள்‌ கணிசமான தொகை மற்றும்‌ நேரத்தினை செலவுசெய்து புதிய படைப்புகளை உங்களுக்கு வழங்குகிறார்கள்‌. இந்த படம்‌ மற்றும்‌ நிகழ்ச்சிகள்‌ அனைத்தும்‌ பொழுதுபோக்கிற்காக மட்டுமே. இப்படமானது உங்களை மகிழ்விப்பதற்காகவே, தயாரிப்பாளர்கள்‌, இயக்குநர்கள்‌, நடிகர்கள்‌, இசையமைப்பாளர்கள்‌ மற்றும்‌ இதர கலைஞர்கள்‌ தங்களின்‌ திறமை முழுவதையும்‌ பயன்படுத்துகிறார்கள்‌. இதுபோன்ற புதுவிதமான முயற்சிகளை ஊக்குவிக்கும்‌ விதமாக இருப்பது உங்களுடைய சந்தா தொகை, நுழைவு சீட்டு மற்றும்‌ இணையதள திரைப்பட வாடகையே ஆகும்‌.

 

gesrg

 

இதுபோன்ற அசாதாரணமான சூழ்‌ நிலையில்‌ நீங்கள்‌ வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாகப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதிய சேனல்கள்‌ மூலம்‌ கண்டுமகிழ வழங்குகிறோம்‌. இதில்‌ குறிப்பாக டிஜிட்டல்‌ வாயிலாகத் திரைப்படங்கள்‌, குறும்படங்கள்‌ மாற்றும்‌ வெப்சீரிஸ்‌ போன்றவை வழங்குவதில்‌ முன்னணி வகிப்பது Regal Talkies, இந்த Pay View OTT முறையில்‌ குறைந்த செலவில்‌ புதிய நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வழிலகை செய்கிறது. வரும்‌ 15 ஆகஸ்டு 2020 அன்று Regal Talkies-ல்‌ 'ஒன்பது குழி சம்பத்'‌ வெளியாக உள்ளது. இப்படத்தினை பெரும்பாலான ஆதரித்தாலும்‌, சிலர்‌ சட்ட விரோத செயல்களில்‌ ஈடுபடுவதால்‌ கடுமையான நடவடிக்கை எடுக்கும்‌ சூழ்நிலை ஏற்படுகிறது. சட்டவிரோதமான இணையதள வழிதளங்களான Torrent மற்றும் இதர இணையதளங்கள்‌ அல்லது காபிரைட்‌ உரிமையாளரால்‌ அங்கீகரிக்கப்படாத வேறெந்த வலைதளம்‌, செயலிகள்‌ மூலம் இப்படத்தினை பதிவிறக்கம்‌ செய்து பார்ப்பதோ, டெலிகிராம்‌ உள்ளிட்ட வேறு எந்த சமூக வலைதள பக்கங்களில்‌ பதிவது, பகிர்வது, விநியோகிப்பது பதிப்புரிமை சட்டத்தினை மீறிய செயல்‌.

 

இதன்படி பதிப்புரிமை சட்டத்தின்‌ கீழ்‌ உள்ள 63, 63A 65 மற்றும்‌ 65A பிரிவுகளின்படி 3 ஆண்டுகள்‌ சிறைத்தண்டனை மற்றும்‌ 3,00,000 வரை அபராதம்‌ விதிக்கப்படும்‌. இத்திரைப்படத்தின்‌ தயாரிப்பாளர்கள்‌, பதிப்புரிமை உரிமையாளர்கள்‌ சட்டம்‌ மற்றும்‌ தொழில்நுட்ப குழுவினர்‌ உதவியுடன்‌ சட்டவிரோத பதிவிறக்கங்களைக் கண்காணித்து வருகின்றனர்‌. இப்படத்தினை பார்க்கும்‌ நபர்கள்‌ எவரேனும்‌ சட்டவிரோத பதிவிறக்கங்கள்‌ அல்லது டெலிகிராம்‌ உள்ளிட்ட வேறு எந்த சமூக வலைதள பக்கங்களில்‌ பதிவது,பகிர்வது, வினியோகிப்பது போன்ற செயல்களில்‌ ஈடுபட்டால்‌ உங்களின்‌ இணையதள சேவை வழங்கும்‌ நிறுவனத்திடம்‌ இருந்து உங்கள்‌ IP முகவரி பெற்றுத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌. இதன்படி நாங்கள்‌ தெரிவிப்பது என்னவென்றால்‌ சட்டப்படி முறையான வலைத்தளங்கள்‌ மூலமாக உங்களின்‌ விருப்பமான நிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ திரைப்படங்களை கண்டுகளியுங்கள்‌. நாங்கள்‌ உங்களின்‌ விருப்பமான நிகழ்ச்சிகளை மலிவு விலையிலேயே தருகிறோம்‌. மலிவு விலை செலுத்துவதைத் தவிர்ப்பதாக நினைத்தால்‌ பெரும்‌ தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும்‌" என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இதை செய்தால் சிறிய படங்கள் வெற்றியடையும்"- நடிகர் அப்புக்குட்டி யோசனை!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
cvszgas

 

ரேகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'வெட்டி பசங்க' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் அப்புக்குட்டி பேசும்போது...

 

"இப்படத்தில் எனது கதாபாத்திரத்தை கூறியதும் மிகவும் பிடித்து விட்டது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. சிறிய படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், அதைவிட திரையரங்குகளின் டிக்கெட் விலையை சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் சிறிய படங்கள் வெற்றியடையும்" என்றார்.

 

Next Story

''எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றும் இல்லை!'' - நடிகர் அப்புக்குட்டி 

Published on 07/05/2020 | Edited on 07/05/2020
hrh

 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை சமூகவலைதளம் மூலமும், அறிக்கைகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தன் பிறந்தநாளான இன்று நடிகர் அப்புக்குட்டி கரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

''இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம். இது மனிதாபிமானத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனையாகும். இதுவரை  45 நாட்கள் கடந்து விட்டன. இதில் பல பலதரப்பட்ட மனிதர்களை அடையாளம் காண முடிகிறது. மடி நிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய இருள் இருக்கும் மனிதர்களையும், இருப்பதைப் பிரித்துக் கொடுக்கும் மனிதர்களையும் காண முடிகிறது. இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். அவர்கள் மத்தியில் இந்த நாட்டில்  தன்னாலான உதவிகளை எத்தனையோ பேர் பெரிய மனதோடு செய்து கொண்டிருக்கிறார்கள். இருட்டாக இருக்கிறது என்று சொல்பவரை விட ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்றுபவர் உயர்வானவர். 

 

இந்தச் சோதனையான காலத்தில் ஏதாவது உதவி செய்யுங்கள், முடிந்ததை உதவி செய்யுங்கள், சகமனிதனை மதியுங்கள். சிரமப்படுவோருக்குத் தன்னளவில் ஏதாவது செய்யுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். நானும் என்னளவில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றும் இல்லை. நிம்மதி திரும்பினால் போதும். போராட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. இறைவன் மீட்டுக் கொண்டு வருவான் நல்ல முடிவு விரைவில் வரும்.  மன தைரியத்துடன் எதிர்கொள்வோம். மக்கள் தைரியமா இருந்தால் சந்தோஷம் கிடைக்கும்'' என கூறியுள்ளார்.