Omar Lulus Nalla Samayam movie withdrawn from theatres

மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஓமர் லுலு, ‘நல்ல சமயம்’ என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்துள்ளார். மலையாளத்தில் உருவான இப்படத்தில் இர்ஷாத் அலி, விஜீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.முன்னதாக இப்படத்தின் ட்ரைலர்வெளியீட்டு நிகழ்ச்சி ஒரு மாலில் நடைபெறவிருந்தநிலையில் சிறப்பு விருந்தினராக நடிகை ஷகிலா அழைக்கப்பட்டிருந்தார். சில காரணங்களால்அவருக்கு அந்த மால் நிறுவனம் மறுப்பு தெரிவிக்க, உடனே படக்குழு அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. அப்போது இந்த நிகழ்வு சர்ச்சையானது.

Advertisment

இதையடுத்து படத்தின்டிரைலர்வெளியான நிலையில் அதில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளைபடத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும், அது போதைப்பொருளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறிஇயக்குநர் ஓமர் லுலு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்தனர். பின்புஓமர் லுலு மற்றும் தயாரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குநர், "அப்படிஎந்த நோட்டீஸும் எனக்கு வரவில்லை இதற்குமுன்புபீஷ்ம பர்வம், லூசிபர், இடுக்கி உள்ளிட்ட படங்களில் வந்துள்ளது. ஏன் என் படங்கள் மட்டும் டார்கெட் செய்யப்படுகின்றன.நாங்கள்போதைப்பொருளை ஊக்குவிக்கும் வகையில் இப்படத்தை எடுக்கவில்லை. எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் விதமாககாட்சிகள் அமைக்கப்பட்டது" என விளக்கம் அளித்திருந்தார்.

Advertisment

போதைப்பொருள் காட்சி சம்பந்தமானவழக்கு பதிந்து விசாரணை நடந்து வரும் நிலையில் ‘ஏ’ சான்றிதழுடன் கடந்த மாதம் 30ஆம்தேதி நல்லசமயம் படம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கலவையானவிமர்சனமேகிடைத்தது. இந்த வழக்கு குறித்து தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இயக்குநர்ஓமர் லுலு. அந்தப் பதிவு ஒன்றில்கடந்த 2ஆம் தேதி "திரையரங்குகளில்நல்ல சமயம்படத்தை திரும்பப் பெறுவதாகவும், மீதமுள்ள விஷயங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும்" அறிவித்தார்.

முன்னதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சமயத்தில்எக்ஸைஸ் போலீசார், “போதைப் பொருள் சம்பந்தப்பட்டகாட்சியை படம் நீக்காவிட்டால் படத்தை திரையிட முடியாதபடி முன்னெடுப்போம்" எனக் கூறியிருந்தனர். அதேபோல் படம் வெளியான பிறகு அந்த காட்சிகள் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்துள்ள வழக்கை தொடர்ந்து புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.திரையரங்கில் ஒரு படம் வெளியாகி திரும்ப அகற்றப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இது குறித்துஇயக்குநர்ஓமர்லுலு, "படத்தின் பட்ஜெட்டைவிட ஓடிடியில் நல்ல விலைக்கு கேட்கப்படுகிறது.கோர்ட் உத்தரவுக்கு பிறகு ஓடிடியில் ‘நல்ல சமயம்’ படம் வெளியாகும்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.