Advertisment

பழம்பெரும் பாடகர் மறைவு!

al raghavan

பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ரகவன் இன்று தனது 73 வயதில் காலமானார்.

ராகவனுக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. இவர் பழம்பெரும் நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான கே.என்.ராஜத்தின் கணவர் ஆவார்.

Advertisment

இவர் பாடகாராக மட்டுமல்லாமல் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தின் மூலம் நடிகராகவும் திரையுலகில் அறிமுகமானார். 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடலின் மூலம் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் 'அலைகள்', 'அகல்யா' என்ற இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் ஏ.எல்.ராகவன் நடித்துள்ளார்.

Advertisment

ஏ.எல்.ராகவனின் மறைவிற்குத்தமிழ்த் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

kollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe