“விஷ்ணு விஷால் நடிகராகவே இந்த படத்தில் வருகிறார்” - இயக்குநர் தகவல்

oho enthan baby movie update

ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் ருத்ரா, மிதிலா பால்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. படத்தின் நாயகன் ருத்ரா விஷ்ணு விஷாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ருத்ரா, மிதிலா பால்கர், மிஷ்கின், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூலையில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படம் குறித்து படக்குழுவினர் பேசியுள்ளனர். விஷ்ணு விஷால் பேசுகையில், “ருத்ராவை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவது ரொம்ப மகிழ்ச்சி” என்றார். பின்பு ருத்ரா பேசுகையில், “இந்த படம் ஒரு ரொமாண்டிக் ஜானர் படம். ஒரு நபரின் கம்மிங் ஆஃப் ஏஜ் டிராமாவும் தான்” என்றார். பின்பு படத்தின் இயக்குநர் பேசுகையில், “விஷ்ணு விஷாலும் இந்த படத்தில் வரார். அவராகவே இதில் வரார். அதாவது படத்தின் ஹீரோ உதவி இயக்குநராக நடித்திருக்கும் சூழலில் ஒரு ஹீரோவிடம் கதை சொல்கிறார். அந்த ஹீரோவாகவே விஷ்ணு விஷால் வருகிறார். அவரிடம் ஒரு கதை சொல்ல, அந்த கதை எப்படி வருகிறது என்பது தான் படம்” என்றார்.

actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Subscribe