Harish Kalyan

அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மணப்பெண்ணே’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பெல்லி சூப்பலு’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

Advertisment

இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டுவந்த நிலையில், படத்தின் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 22ஆம் தேதி ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment