அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடித்திருக்கும் படம் “ஓ மை கடவுளே”. இப்படத்தில் வாணி போஜன், ஷாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட படம் முழுவதும் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்.

Advertisment

oh my kadavule

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த படத்தை புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியுள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் அனைத்து தரப்பு மக்களவையும் கவர்ந்து செம ஹிட் அடித்தது.

இந்நிலையில் இப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் வாணிபோஜன் பயன்படுத்தும் தொலைபேசி எண் என ஒரு எண் சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தை பார்க்கும் பலரும் அது உண்மையாகவே வாணி போஜனின் நம்பர் என நினைத்து கால் செய்திருக்கின்றனர். ஆனால், அந்த நம்பர் பூபாலன் என்று யாரோ ஒருவருடையது.

Advertisment

டெய்லி அந்த நம்பரிலிருந்து பலரும் தனக்கு கால் செய்து தொந்தரவு செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன் என்று ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வந்த மாரிமுத்து மீது போலீஸில் புகாரளித்துள்ளார்.