Advertisment

‘குட் பேட் அக்லி’ - ‘ஓஜி’ பட கம்பேரிசன்; விமர்சனத்திற்கு பதில் சொன்ன இயக்குநர்

129

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு படம் ‘ஓஜி’. டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரியா ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. 

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.154 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனிடையே இப்படம் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இருபடங்களிலும் நாயகரக்ள் கேங்ஸ்டராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘ஓஜி சம்பவம்’ என்ற பாடலும் இடம்பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது. 

Advertisment

இந்த நிலையில் ஒப்பீடு குறித்து தற்போது ‘ஓஜி’ பட இயக்குநர் சுஜீத் பேசியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு ஆதிக் ரவிச்சந்திரனை நீண்ட காலமாக தெரியும். என்னுடைய சாகோ படத்தை பார்த்து அவர் பெரிய மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார். நானும் அவருடைய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை பார்த்து பேசியிருக்கிறேன். ஓஜி பட டீசர் வெளியான போது அவர் குட் பேட் அக்லி பட படப்பிடிப்பை தொடங்கவில்லை. ஆனால் ஓஜி சம்பவம் என்ற பாடலை மட்டும் வெளியிட்டிருந்தார். 

எங்கள் படத்தை கெடுக்கும் நோக்கம் அவர் அப்படி செய்யவில்லை. ஆனால் எது முதலில் வந்ததோ அதைத்தான் மக்கள் நியாபகம் வைத்திருப்பார்கள். சிலர் இதை ஒத்துக்கொள்ள மாட்டர்கள், புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். யாரோ ஒருவர் ஓஜி சம்பவம் பாடல் வெளியாகப்போவதாக என்னிடம் சொன்ன போது அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எல்லாரும் நல்ல படத்தை எடுக்கத்தான் முயற்சி செய்கிறோம்” என்றார்.  

director Good Bad Ugly ACTOR AJITHKUMAR ACTOR PAWAN KALYAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe