Advertisment

வெப் சீரிஸாக உருவாகும் ‘ஆஃபிஸ்' தொடர்

Office television serial to be made into a web series

Advertisment

கனா காணும் காலங்கள் சீரிஸைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஆஃபீஸ் தொடரின் மறுவடிவமாக அதே பெயரில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

தமிழ் தொலைக்காட்சியின் முதல் ஆஃபீஸ் நிகழ்வுகளை பற்றிய தொடராக வெளியான ஆஃபிஸ் தொடரில், நடிகர்கள் கார்த்திக் ராஜ், ஸ்ருதி ராஜ், விஷ்ணு, மதுமிளா, உதயபானு மகேஸ்வரன், சுசேன் ஜார்ஜ், சித்தார்த் மற்றும் அன்பழகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் ராம் விநாயக் இயக்கிய இந்தத் தொடர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

562-எபிசோட் கொண்ட இந்த தொடர், ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியர்களைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவானது. இப்போது, அதே தொடர், வெப் சீரிஸாக, புத்தம் புதிய நடிகர்கள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட அமைப்புடன் உருவாக்கப்பட உள்ளது. இது முந்தைய தொடரின் அடிப்படை அம்சங்களுடன், ஆஃபீஸ் களேபரங்களை நவீனமாக எடுத்துச் சொல்லும் என தெரிவிக்கப்பட்டது.

web series
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe