Advertisment

”அசிஸ்டண்டா நயன்தாரா முன்னால திட்டு வாங்கிய நான் இன்னைக்கு அவங்கள வச்சே படம் பண்ணிருக்கேன்” - ஜி.கே. விக்னேஷ் நெகிழ்ச்சி

O2 Movie Director

ஜி.கே.விக்னேஷ்இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம்ஆக்சிஜன்(O2). இப்படம் நேரடியாகஹாட்ஸ்டார்ஓடிடிதளத்தில் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஜி.கே.விக்னேஷைநக்கீரன்ஸ்டூடியோசார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் O2 படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

Advertisment

”இந்தக் கதையை எழுத நான் கொடுத்த உழைப்புதான் என்னை இந்தஇடத்திற்குக்கொண்டுவந்துள்ளது. o2 கதையில்நடிக்கச்சம்மதம் தெரிவித்ததற்காக நயன்தாராமேம்க்குநன்றி. பத்து ஆண்டுகளுக்கு முன்புஷார்ட்ஃபிலிம்எடுத்தேன். அதன் மூலமாகசினிமாவுக்குள்வந்து தற்போது என்னுடையஅறிமுகப்படத்தைஇயக்கியிருக்கிறேன். படத்தில் சில காட்சிகள்ரொம்பவும்கடினமாக இருக்கும். ஆனால், நயன்தாரா மாதிரியான அனுபவம்வாய்ந்தநடிகர் நடிக்கும்போது அதைஎளிமையாகப்படமாக்க முடிந்தது. இது உன்னுடைய முதல் படம். நல்லா பண்ணு என்று நயன்தாராமேமும்என்கரேஜ்பண்ணார். கதையில் அவருக்காக எந்த மாற்றமும் செய்யவில்லை. நான் என்ன எழுதினேனோ அதில்தான் நடித்தார். அறிமுக இயக்குநர் என்று நினைக்காமல் என் மீது நம்பிக்கை வைத்து நடித்ததற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

Advertisment

இந்தப் படம் முழுக்க முழுக்கஆக்ஸிஜனைமையப்படுத்திய கதை. படத்தில்யூடியூப்பிரபலம் சிறுவன்ரித்விக்சிறப்பாக நடித்துள்ளார். நான் சொல்வதைஈஸியாகஉள்வாங்கிக்கொண்டு நடித்தார். இவ்வளவு சின்ன வயதிலேயே அவருக்கு அந்தத் திறமை இருக்கிறது.முழுப்படமும்ஒரேபஸ்ஸிற்குள்நடப்பதால்ஆடியன்ஸுக்குபோரடித்துவிடக்கூடாதுஎன்று கூடுதல் மெனக்கெடலுடன் திரைக்கதை எழுதினேன்.டெக்னிக்கலாகவும்படம் சிறப்பாக வந்துள்ளது.

மாஸ்படத்தில் நான் உதவி இயக்குநராக வேலை பார்க்கும்போது நயன்தாராமேம்முன்னால்செட்டில்நிறையதிட்டுவாங்கிருக்கேன். ஒருமுறை நான் திட்டு வாங்கியதும்அவங்கசிரிச்சாங்க. அப்படி இருந்த நான்இன்னைக்குஅவங்களவச்சுபடம்பண்ணிருக்கேன்என்று நினைக்கும்போதேரொம்பவும்சந்தோசமாஇருக்குது”. இவ்வாறு ஜி.கே.விக்னேஷ்தெரிவித்தார்.

O2 Movie ACTRESS NAYANTHARA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe