Advertisment

'ட்ரெண்டிங்கில் நம்பர் 1' ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கும் 'விக்ரம்' ட்ரைலர்

'Number 1 in Trending'; 'Vikram' trailer

Advertisment

'விஸ்வரூபம் 2' படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ''பத்தல பத்தல' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த ட்ரைலரில் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் நடித்துள்ளதாக தெரிகிறது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இருவரும் கமலுக்கு செம டஃப் கொடுத்து நடித்துள்ளது போல் வெளிவந்திருக்கும் இந்த ட்ரைலர் யூ டியூபில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் தற்போது முதலிடத்தில் இருக்கிறது. இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTOR KAMAL HASSHAN actor vijay sethupathi anirudh lokesh kanagaraj vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe