Advertisment

நிர்வாண புகைப்பட வழக்கு; அவகாசம் கேட்கும் ரன்வீர் சிங்

 Nude Photo Case; Ranveer Singh asking more time for investigation

Advertisment

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் சமீபத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்பு ரன்வீர் சிங்கிற்கு எதிராக நூதன முறையில் சிலர் போராட்டமும் நடத்தினர். மேலும் இது தொடர்பாக அவர் மீது மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ரன்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து அவர் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் கொடுத்தனர். அப்போது அவர் வீட்டில் இல்லை என தெரிந்ததும் வருகிற 22-ஆம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரன்வீர் சிங் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணையில் சேர கூடுதல் அவகாசம் கோரியுள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

MUMBAI POLICE ranveer singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe