Advertisment

‘மிஸ்டர்.லோக்கல்’ படம் மே-1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்த இரண்டு படங்களின் படபிடிப்பில் பிஸியாகிவிட்டார். சிவாவின் 14 படம் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்கான படபிடிப்பு முடிவடைய இருக்கு நிலையில் உள்ளது. இதற்குள் இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோ படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.

Advertisment

இந்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன். இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸுடன் ஏற்கனவே குறும்படத்தில் நடித்திருக்கேன். இந்த இருவரும் திறமையானவர்கள் என்று அதில் பதிவிட்டிருந்தார்.

இந்த படம் முடிந்தவுடன் சிவாவின் 16வது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment