/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_54.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு இரு வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தை சுருக்கி படக்குழுவினர் பி.எஸ் என்று விளம்பரப்படுத்தி வந்த நிலையில், தற்போது அப்படி விளம்பரப்படுத்த வேண்டாம் என்று படக்குழுவிற்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளனர். பி.எஸ் என்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவ கூட்டமைப்பை குறிக்கும் வார்த்தை. அதை நீங்கள் குறிப்பிட்டால் மத ரீதியிலான போரைகுறிப்பது போலாகிவிடும். அதனால் பி.எஸ் என்று விளம்பரப்படுத்த வேண்டாம் என இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது
Follow Us