Advertisment

"இது வழக்கமான ஹீரோயின் சப்ஜெக்ட் கிடையாது" - இயக்குநர் சக்திவேல் பேச்சு

publive-image

நடிகர் பரத் மற்றும் நடிகை வாணிபோஜன் நடித்துள்ள 'மிரள்' திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (04/11/2022) நடைபெற்றது.

Advertisment

விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் சக்திவேல், "இந்த மேடை எனக்கு கிடைச்சதுக்கு முக்கியமானக் காரணம் டெல்லி பாபு சார். டெல்லி பாபு சார்கிட்ட போனதுக்குக் காரணம், என்னோட கதாநாயகன் பரத் சார். இந்த மேடை எனக்கு எவ்வளவுமுக்கியம் அப்படினா, முதல் படம் எல்லாருக்கும் ரொம்ப ஸ்பெஷல். எல்லாரும் சொல்றாங்க, 20 நாள்ல படம் முடிச்சுட்டான்னு. அதற்கான பொறுப்பு ரொம்ப ஜாஸ்தி. இன்னைக்கு ஒரு இயக்குநருக்கு ஒரு கதைக்கு ஒரு கதாநாயகனும், ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கிறதுலாம் ரொம்ப அரிது.

Advertisment

அப்படிகிடைக்கிற வாய்ப்புலநாம பக்குவமா படம் பண்ணி, அதசக்ஸஸ் வரைக்கும் கொண்டு போய், நம்மளநம்பிபணம் போட்ட தயாரிப்பாளர அதுல இருந்து மீட்டுக் கொண்டு வரணும். நம்மள நம்பிகதைக் கேட்டுநடிக்க ஒத்துக்கிட்ட நாயகர்களையும் கீழே கொண்டு போய் விட்டுடக் கூடாது. எல்லா எஃபோர்ட்டுக்கும் கூட வர டெக்னிசீயனையும் நாம் எப்போதுமே கொண்டு போகணும். இது ஒன்னு மட்டுந்தான் எனக்கு நம்பிக்கையா இருந்தது. இந்த வாய்ப்பைப் பொறுப்பா பாத்துக்கிட்டேன். அதனால தான் இதைப் பண்ண முடிஞ்சது. யாருகிட்டயுமே அசிஸ்டென்டா ஒர்க் பண்ணாம, இந்த மாதிரி ஒரு ஸ்டேஜ் கிடைச்சி, இந்த மாதிரி படம் பண்ணணுங்கிறதெல்லாம் மிகப்பெரிய கனவு தான்.

பரத் ப்ரோவுக்கு கால் பண்ணேன். வாங்க சக்தின்னு சொன்னாரு. கதை கேட்டாரு. நரேஷன் கேட்டு ஓகே சொன்னாரு. எனக்கு என்னைக்குமே சினிமாவுலப் பிடித்தது அனுஷ்கா என்ற ஒரே ஒரு கதாநாயகி தான். அதற்கு அப்புறம் எந்த கதாநாயகியும் இல்ல. வாணிபோஜன் கதை கேட்டு இன்வால்வ் ஆன விசயம் எனக்கு ரொம்ப புடிச்சுருந்துச்சு. ஏன்னா, போனதுமே நா சொன்னது, இது வழக்கமான ஹீரோயின் சப்ஜெக்ட் கிடையாது. இந்த படத்துல உங்களுக்கும், பரத் சாருக்கும் 7,8 வயசுல ஒரு பையன் இருப்பான். இது ஓகேவா?ஓகேனு சொன்னா கதை சொல்றேனு சொன்னேன்.

அப்படியே பாத்தாங்க...சக்திவேல் நீங்க என்னை நம்பி கதை சொல்ல வந்துட்டீங்க. எனக்கு கதை தான் முக்கியம், அப்படின்னாங்க.கதை சொன்னதுமே, இந்த கதை நான் பண்றேன். தயவுசெஞ்சு வெளியப் போய் பண்ண மாட்டேன், யாருட்டயும் சொல்ல மாட்டேனு சத்தியம் பண்ணச் சொன்னாங்க. அப்படியே டேக் ஆப் ஆகிடுச்சு. இந்தப் படம் பாருங்கள். நிச்சயம் உங்கள் எல்லாருக்கும் புடிக்கும். ரெகுலர் பேட்டர்ன் ஆப் ஹாரர் த்ரில்லர், க்ரைம் த்ரில்லர் ஜானர்தான்.ரொம்ப டிஃப்ரெண்டாலாம் இருக்காது. களத்தை மட்டும் நான் டிஃப்ரெண்டா வச்சிட்டு, ஸ்கிரீன்ப்ளேல ஒர்க் பண்ணிருக்கோம். எல்லோரோட, ஒட்டுமொத்த டீமோட உழைப்பு தான் ‘மிரள்’. நான் டைரக்டர் ஆகணும்னு நினைச்ச அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்." இவ்வாறு இயக்குநர்சக்திவேல் பேசினார்.

trailer launch
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe