Skip to main content

இந்தி வேணான்னு சொல்லல, ஆனால்... - ஆரி பேச்சு

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Not to mention Hindi, but ... - Actor Aari speech

 

இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி ஜி எஸ் தயாரித்து நடித்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு சுமார் 450 தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த திரைப்படத்தை 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படமாக்கி படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

 


இவ்விழாவில் பேசிய  நடிகர் ஆரி, "பான் இந்தியா படங்கள் அதற்கான திட்டமிடல்களோடு உருவாகும். 'பீஸ்ட்' படம் தமிழ் பிராந்திய மொழி படம். அதை தாண்டி பக்கத்தில் எவ்ளோ தூரம் போகுமோ அங்க போய் படத்தை பாத்துக்கலாம். பழனிக்கு ஏன் மொட்டை அடிக்க வரவில்லை என்று கேட்டால் அவர் திருப்பதிக்கு போறவராக இருப்பார். அவர் பழனிக்கு வரணும்னு அவசியம் இல்லை. நம்ம திருப்பதிக்கு போகும் என்று எண்ணினால் தான் திருப்பதிக்கு போய் மொட்டை அடிக்கணும். அதனால் நாம எடுக்கிற படம் வியாபார தளத்தை தாண்டி தமிழ் சினிமாவிற்கு எப்போதுமே ஒரு அடையாளமான ஒரு படம். நம்ம தமிழ் சினிமாவில் தான் 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரு ஆள் நடித்து உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தோம்.

 

அந்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் நூறு சினிமாக்களில் சிறந்த படம் எனும் லிஸ்டில் நம்ம ஆளுங்க எடுத்த நாயகன் படம் இடம்பெற்று இருக்கிறது. ஒரு படம் சரியாக போகவில்லை என்பதால் தமிழ் சினிமாவே சரியில்லை என்று சொல்வதை விட தமிழ் சினிமா இன்னும் சரியான தரமான படங்களை கொடுக்க நம்ம முயற்சி பண்ணனும் என்கிற விவாதம் தான் தேவை. அதை தவிர தமிழ் சினிமாவில் இருக்கிற அத்தனை படங்களும் அத்தனை இயக்குநர்களும் மட்டமானவர்கள், படமே எடுக்க தெரியாதவர்கள் மாதிரி ஒரு பிம்பத்தை சமீப காலங்களில் ஒரு விவாதம் நடைபெறுகிறது. அந்த விவாதம் மூலமாக சினிமாவை விமர்சித்து பணம் சம்பாதிக்கிறார்கள். அது எந்த வகையிலும் சினிமாவை வளர்த்து எடுக்காது. சினிமாவில் நல்லது பேசினாலும் காசு, கெட்டது பேசினாலும் காசு அப்படிங்கிறதுல ஒரு விவாதம் ஆகிவிட்டது. நாம சாதனையாளராக மாறுவதை விட நம் படைப்பு சாதனையானதாக இருக்க வேண்டும் என்பது தான் இங்க முக்கியம்.

 

பெரிய படங்களை போல் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் இப்படத்தில் கிடையாது. இவர்களுடைய மிக பெரிய சொத்து இவர்களின் தன்னம்பிக்கை மட்டும் தான். அந்த நம்பிக்கையில் தான் பத்திரிக்கையாளர்களிடம் வெறும் நாற்பது வினாடிகளுக்கு ஒரு டீசர் போட்டு காண்பித்து தன்னம்பிக்கையோடு பேசுகிறார்கள். வார்த்தை தான் ஒரு இடத்துல நம்பிக்கையாக படமா கொடுக்குது. அடுத்து படத்தின் ட்ரைலர், முன்னோட்டம் ரீலீஸ் செய்யும் போது இன்னும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான இது ஒரு சின்ன முன்னோட்ட விழா. அதை தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறேன். இப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கு நடிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மாபெரும் மனித உழைப்பு இப்படத்திற்கு பின்னாடி இருக்கிறது. படத்தின் மொத்த நீளம் 81 நிமிடம். அந்த 81 நிமிடமும் தவம் இருந்தால் மட்டுமே அதை சரியா நேர்த்தியாக பண்ண முடியும். ஒரு ஆள் தவறு செய்தாலும் முடிஞ்சிது. நான் நேசிக்கும் சினிமாவிற்கு திருப்பி செய்யும் விஷயம் இந்த புது முயற்சி. புது முயற்சிக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும். இந்த ஒரு சின்ன முயற்சி தான் நாளை ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படணும். எவ்ளோ பெரிய பான் இந்தியா படமாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு வந்தா தமிழ் தான் பேசுது. எந்த மொழிக்கும் எந்த படம் போனாலும் அந்த மொழி பேசினால் தான் காசு.  நாங்க இங்க காசு கட்டுகிறது  நாங்க வாழ்வதற்கான வரியை உங்களிடம் கொடுக்கிறோம்.

 

அதனால் நாங்க என்ன பேசணும், எந்த மொழிய பயிற்றுவிக்கணும் , எந்த மொழியை வளர்த்தெடுக்கணும் என்பது நம்மளுடைய உரிமை. உலகத்துக்கெல்லாம் அவரவர்கள் மொழி அவர்களுக்கானது. தமிழ்நாட்டுடைய தாய் மொழி தமிழ் நமக்கானது. எனவே இணைப்பு மொழி நமக்கு தமிழ் தான். இந்தி வேணாம்னு சொல்லல, தமிழுக்கு நோ சொல்லுவதுதான் வேணாம் என்கிறோம். இந்தி உங்களுடைய மொழி அதை நீங்களே வச்சிக்கோங்க, தமிழ் என் தாய் மொழி அது எப்போதும் என் அடையாளம்" என பேசினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஷாலின் ரத்னம் படம் மட்டும் தான் ஒரு நொடி படத்திற்கு போட்டி” - ஆரி அர்ஜுனன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
aari arjunan speech in oru nodi press meet

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.  இந்தப் படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டீசரும் ட்ரைலரும் ஒரே நாளில் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடபெற்றது. இதில், நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி.வி.குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌

அப்போது ஆரி அர்ஜுனன் பேசுகையில், “இந்தப் படக் குழுவினருக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதுதான் ட்விட்டரை பார்த்தேன். 'அரண்மனை 4' படத்தின் வெளியீடு மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நொடி படத்திற்கு போட்டியில்லை. உங்களுக்கு விஷால் நடித்திருக்கும் 'ரத்னம்' படம் மட்டும் தான் போட்டி.

தமன்- ஈரோடு மகேஷ்- நான் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் ஒரு கதாநாயகனின் வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பெரிய போராட்டத்தைப் போன்றது. ஏனெனில் நடிகர்கள் உடம்பை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். வாய்ப்புகளைத் தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும். எனக்கும், தமனுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும்  என்ன பிரச்சனை என்றால், கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டு.‌ படத்தின் போஸ்டர் ஒட்டும் வேலையைக் கூட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் செய்வார்கள். ஆனால் நாயகன் என்பவர் திரையரங்கில் படம் ஓடும் கடைசி நாள் வரை வேலை செய்து கொண்டிருப்பார்.

'சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள்' என்று விஷால் நல்ல நோக்கத்தில் தான் சொன்னார். ஆனால் பலரும் அதனை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம், என்றில்லை. நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போது ஆதரவு தர தயாராகவே இருக்கிறார்கள். 'மஞ்சுமல் பாய்ஸ்', 'காந்தாரா' போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழில் பெற்றிருக்கிறது. நிறைய நல்ல படங்கள் இங்கு ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம் நல்ல கன்டென்ட்தான். நல்ல கதை, நல்ல திரைக்கதை, நேர்மையான உழைப்பு, இவையெல்லாம் ஒன்றிணைந்தால்.. அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்” என்றார்.

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.