Advertisment

நிரந்தரமாக மூடப்படும் பிரபல திரையரங்கம்!

agathya theatre

சமீபகாலமாக மல்டி ப்ளக்ஸ் திரையரங்கங்களின் வளர்ச்சியால் சாதாரண திரயரங்குகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாகதான் உள்ளது. ஆயிரம் பேரை அமர வைத்து படம் காட்டப்பட்ட பல திரையரங்குகளின் இன்றைய நிலை திருமண மண்டபங்களாகவும், பழமையடைந்த கட்டிடமாகவும் காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் பல பழமை வாய்ந்த திரையரங்கங்களின் லிஸ்ட் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது.

Advertisment

அந்த வரிசையில் வட சென்னையிலுள்ள ஐம்பது வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த அகஸ்தியா திரையரங்கம் இன்றிலிருந்து நிரந்தரமாக மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரையரங்கில் ‘பாமா விஜயம்’ என்னும் படத்தை முதன் முதலில் திரையிடப்பட்டது. வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம், 1,004 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய திரையரங்காகும்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் இந்த திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக நஷ்டத்தில் ஓடும் இந்த திரையரங்கம், தற்போது லாக்டவுனால் நிரந்தரமாக மூடப்படுகிறது.

theatre
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe