Advertisment

“சாப்பாட்டுக்கே வழியில்லை” - மனம் திறந்த நோரா ஃபதேகி

nora fatehi shared Surviving On Eggs And Breads in one day

பாலிவுட்டில் பல பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா ஃபதேகி. மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே ரூ.200 கோடி மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நோரா ஃபதேகிக்கு தொடர்புடையதாகக் கூறப்பட்டு பலமுறை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டார். தென்னிந்திய மொழிகளில் பிரபாஸின் 'பாகுபலி' மற்றும் கார்த்தியின் 'தோழா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். பல்வேறு நாடுகளில் பல நிகழ்ச்சிகளிலும் நடனமாடியுள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0de78051-68df-4325-b3fe-b591e4e30290" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_5.jpg" />

Advertisment

இந்த நிலையில் தனது வாழ்க்கையில் பட்ட துயரங்களை பற்றி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில், “இந்தியாவிற்கு நான் வந்த போது என்னிடம் ரூ.5,000 மட்டும் தான் இருந்தது. மூன்று படுக்கை அறை கொண்ட ப்ளாட்டில் ஒன்பது பேருடன் வசித்து வந்தேன். அதில் இருவர் மட்டுமே பெண்கள், ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த போராட்டம் மிகவும் மோசமானது.

ஒரு நாளைக்கு ஒரு பிரட், ஒரு முட்டை மட்டும்தான் சாப்பிட முடிந்தது. மூச்சு விடுவதுக்கு கூட பணம் வசூலிப்பார்கள். இப்படிப்பட்ட ஏஜென்சிகளும் இருக்கிறார்கள். ஆனால் இப்போது அளவிற்கு அதிகமாக சம்பாதிக்கிறேன். முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறேன். ஐந்து நிமிட பாடல் காட்சியில் நடனமாட ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறேன்.” என்றார்.

Bollywood Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe