nora fatehi in kaanchana 4

காஞ்சனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்தடுத்து பாகங்களை இயக்கி நடித்து வந்தார் ராகவா லாரன்ஸ். கடைசியாக காஞ்சனா பாகம் 3 வெளியான நிலையில் தற்போது நான்காம் பாகம் உருவாகுவதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

Advertisment

முன்னதாக இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இப்படத்தில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி பிரபலமானார். தமிழில் பாகுபலி படத்தில் ‘மனோகரி’ பாடலுக்கும் தோழா படத்தில் ‘டோர் நம்பர்’ பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதையடுத்து முதல் முறையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.