தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், கடைசியாக இயக்குநர் கார்த்திக்சுந்தர் இயக்கத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, 'ஸ்டார்' என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துவருகிறார். இதனிடையே ஸ்டார் என்ற படத்திலும், இயக்குநர் முத்துசாமி இயக்கும் புதிய படத்திலும்நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வஅறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் சசி இயக்கும் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் சசி ஏற்கனவே பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில்நடிக்கும்சித்தி இட்னானி இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், விஜே பார்வதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சித்து குமார் இசையமைக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டரைபடக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஒரு தீவிரமான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இப்படத்தை மோசன்போஸ்டர் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும்ஈர்த்து வருகிறது.