அயோக்யா படத்தை தொடர்ந்து விஷால் சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். வருகிற அக்டோபர் மாதம் அவருக்கு அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற இருக்கிறது.

Advertisment

vishal

இரண்டு முறை வருமான வரித்துறை சார்பில் அனுப்பட்ட சம்மன் தனக்கு கிடைக்கவில்லை என்று விஷால் தரப்பு தெரிவித்ததற்கு வருமான வரித்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், தனது நிறுவன ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வரித் தொகையை வருமான வரித்துறையினரிடம் நடிகர் விஷால் செலுத்தவில்லை என்று எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து விரைவில் விஷால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவுகிறது.

Advertisment