Advertisment

நோலன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

christopher nolan

'டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Advertisment

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இந்தப் படத்தின் கரு டைம் ட்ராவல் இல்லாமல் ஆனால், டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் தியேரியை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

முன்னதாக படத்தின் டீஸர் வெளியானபோது, 'டெனட்' படம் உலகம் முழுவதும் ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் புது சினிமாக்கள் திரையிடப்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த மூன்று மாதங்களில் வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட திரைப்படங்களில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளன. ஆனால், டெனட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படாமலே இருந்தது. இதனால் படம் ஜூலை மாதத்தில் முன்பு அறிவிக்கப்பட்ட அதே ரிலீஸ் தேதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் கண்டிப்பாக திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்பதை ட்ரைலரில் உறுதி செய்துள்ளது படக்குழு.

அமெரிக்க வார இதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்டோஃபர் நோலன், “‘டெனெட்’ படத்தின் இறுதிக்கட்டபணிகள் முடியும் நிலையில் உள்ளன. திரையரங்குகள் திறக்கப்படும் வேளையில் படம் வெளியாகும். இப்போதைக்கு என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும்'' என்று கூறியிருந்தார்.

http://onelink.to/nknapp

இதனிடையே இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ராஸ், 'டெனட்' ஜூலைமாதம் 31ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவித்துள்ளது.

christopher nolan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe